தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

குடியரசு கட்சியின் தேசிய குழு உறுப்பினராக சண்டிஸ்கர் பெண்

அமெரிக்காவில் வசித்து வருபவர் ஹர்மீத் கவுர் தில்லான் (வயது 47). சீக்கியப் பெண்ணான இவரது பூர்வீகம், சண்டிகார் ஆகும். கலிபோர்னியா மாகாணத்தில் வக்கீல் தொழில் செய்து வருகிறார்.  Chandigarh-origin-woman

கலிபோர்னியாவில் நடந்த குடியரசு கட்சியின் தேசிய குழு கூட்டத்தில் ஹர்மீத் கவுர் தில்லான், தேசிய குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இவர் கலிபோர்னியா மாகாணத்தில் குடியரசு கட்சியின் துணைத்தலைவர் பதவி வகித்து வந்தார். அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  குடியரசு கட்சியின் தேசிய குழு உறுப்பினராக தேர்வு பெற்றிருப்பது குறித்து தில்லான் கூறும்போது,

“சண்டிகாரில் இருந்து சின்னஞ்சிறு சிறுமியாக வந்த நான் இப்போது குடியரசு கட்சியின் தேசிய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். ஜூலை 1-ந் தேதி தொடங்கி 4 ஆண்டுகள் இந்தப் பதவியை வகிப்பேன். ஆபிரகாம் லிங்கனின் குடியரசு கட்சியின் கொள்கைகளை வடிவமைப்பதற்கு உதவியாக இருப்பேன்” என கூறினார்.  குடியரசு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் பதவிக்கு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து இடம் பெறும் 3 பேரில் ஒருவர் தில்லான் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Comments
Loading...