Designed by Iniyas LTD
குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் குத்துச் சண்டை (60 கிலோ) அரை இறுதியில் தான் சிறப்பாக செயல்பட்ட போதிலும் தென் கொரிய வீராங்கனை ஜினா பார்க்குக்கு சாதகமாக நடுவர்கள் தீர்ப்பை வழங்கி விட்டதாக குற்றம் சாட்டிய இந்திய வீராங்கனை சரிதாதேவி, வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.
மாறாக கையில் வாங்கிய பதக்கத்தை ஜினா பார்க்கின் கழுத்தில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்தது. இதற்கிடையே தனது செயலுக்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் துணைத் தலைவர் வெய் ஜிசோங் இதுகுறித்து கூறுகையில், ‘சரிதாதேவிக்கு கடுமையான எச்சரிக்கை விடுப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். இந்த சம்பவத்திற்கும் இந்திய குழுவினருக்கும் சம்பந்தமில்லை என்று கருதுகிறோம். இது முழுக்க முழுக்க தனிப்பட்ட ஒருவரின் தவறான நடத்தையாகும்’ என்று கூறியுள்ளார்.