Designed by Iniyas LTD
குருநாகலில் முஸ்லிம்களின் உடைமைகள் அழிப்பு..


குருநாகல் மாவட்டத்திலுள்ள குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல, நிக்கவரெட்டிய, தும்மலசூரிய ஆகிய பகுதிகளிலும் உடன் அமுலுக்குவரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்குச் சட்டம் நாளை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மையினால் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை இன்று பகல் அங்குள்ளா முஸ்லிம்களுடைய வர்த்தக நிலையங்கள், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
அதோடு பள்ளிவாசல் ஒன்றும் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.