Designed by Iniyas LTD
குர்தீஷ் ராணுவ வீரர்களுக்கு விமானம் மூலம் அமெரிக்கா ஆயுதங்களை வீசியது
சிரியாவில் குர்தீஷ் ராணுவ வீரர்களுக்கு விமானம் மூலம் அமெரிக்கா ஆயுதங்களை வீசியது.ஈராக் மற்றும் சிரியாவில் சில் பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடித்து கொண்டு ஆதிக்கம் செலுத்து கின்றனர். அதை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர்.சிரியாவில் துருக்கி எல்லையில் உள்ள கொபானே நகரமும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கட்டுப்பட்டில் சமீபத்தில் வந்தது. அந்த நகரை மீட்க அப்பகுதியில் மெஜாரிட்டி ஆக வாழும் குர்தீஷ் இனத்தவர் ராணுவம் அமைத்துள்ளனர். அவர்கள் ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் கடுமையாக போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு அமெரிக்கா உதவி வருகிறது .தரைவழியாக போரிடும் குர்தீஷ் ராணுவத் துக்கு உதவ அமெரிக்காவின் சி-130 ரக போக்குவரத்து விமானம் மூலம் நேற்று ஆயுதங் களை வீசியது. மேலும் அவர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் உணவு பொருட்களும் வீசப்பட்டன. இது குர்தீஷ் வீரர்களுக்கு தன்னம்பிக் கையையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு அதன் நட்பு நாடான துருக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தான் என தெரிவித்துள்ளது. பி.கே.கே. என்ற அமைப்பை சேர்ந்த குர்தீஷ் தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக துருக் கிக்கு இடையூறாகவும், பிரச்சினைகள் ஏற்படுத்தியும் வருகின்றனர். இதனால் தான் அவர்களுக்கு அமெரிக்கா செய்து வரும் உதவியை துருக்கி எதிர்க்கிறது.
துருக்கி ஜனாதிபதி ரெசிப் தயிப் எர்கோடன் அமெரிக்காவிடம் இருந்து குர்தீஷ் படைகள் ஆயுதங்கள் வாங்குவதை அனுமதிக்க முடியாது என கூறினார்