தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

குற்றம் புரிந்த வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்

சுவிற்சர்லாந்து நாட்டில் குற்றம் புரிந்த வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதற்காக புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அகதிகளுக்கு எதிரான கொள்கைகளை உடைய சுவிஸ் மக்கள் கட்சி, கடந்த 2010ஆம் ஆண்டு ‘குற்றம் புரிந்த வெளிநாட்டிடவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்’ என ஒரு புதிய சட்டத்தை முன் மொழிந்தது. இந்த சட்டத்திற்கு பெரும்பாலான மக்களும் ஆதரவு அளித்தனர். தற்போது இந்த விவகாரம் சுவிஸ் நாடாளுமன்றத்தில் மீண்டும் சூடு பிடித்துள்ளது.siwss

குறித்த புதிய சட்டத்தில் 11 திருத்தங்கள் செய்து சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மத்தியில் விவாதத்திற்கு வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, எதிர்வரும் அக்டோபர் 1ஆம் திகதி முதல் இந்த புதிய சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2017ஆம் ஆண்டு முதல் சட்டமாக்கப்படும் என தெரியவந்துள்ளது. இந்த புதிய சட்டம் மூலம், குறைந்தது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொலையாளிகள், கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டவர், போதை பொருள் கடத்தல்காரர், கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர்கள் நாடுகடத்தப்படுவார்கள்.

இவ்வாறு நாடுகடத்துப்படுபவர்கள் 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சுவிஸ் நாட்டிற்கு மீண்டும் திரும்ப முடியாது. சுவிஸில் பிறந்திருந்தாலும், சுவிஸ் குடியுரிமை இல்லாத வெளிநாட்டினர்களும் இந்த புதிய சட்டத்திற்கு உட்படுத்தப்படுவார்கள். எனினும், வெளிநாடுகளில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள குற்றவாளிகளுக்கு இந்த புதிய சட்டத்தினை அளிக்க சுவிஸ் நீதிபதிகளுக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...