Designed by Iniyas LTD
குழந்தையை அடித்து உதைத்த தாய் சிறையில் அடைப்பு!
அமெரிக்காவில் தனது 4 வயது குழந்தை உடை மாற்ற மறுத்ததற்கு அவரை அடித்து உதைத்து, அவர் மேல் அமர்ந்து தண்டனை கொடுத்துள்ளார்.
அமெரிக்காவின், வாசிங்கடனில் டவுண் சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட கெண்டுகி என்ற பெண்ணிடம் சில மாதங்களாக அவரது நடவடிக்கை மற்றும் அவரின் குழந்தையை அதிகளவில் திட்டி, அடிப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகித்தனர்.
இதனால் இவரின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக வீட்டில் அவருக்கு தெரியாமல் ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
இந்நிலையில், அந்த கேமராவில் ஒரு அதிர்ச்சியான காட்சி பதிவாகியிருந்தது. வீட்டில் யாரும் இல்லா நேரத்தில், அந்த குழந்தைக்கு உடையை மாற்ற முயல்கிறார்.
ஆனால் இதற்கு சம்மதிக்காத குழந்தையின் காலை தர தர வென இழுத்து செல்வதும், டவுசர போட மாட்டாயா என்று அவர் மீது அமர்ந்து அவரின் காலை பிடித்துக் கொண்டு, உடையை போட்டு விடுகிறார். இந்த கொடுமையால் குழந்தை கதறி துடிக்கிறது.
இந்த வீடியோ ஆதாரத்தை வைத்துக் கொண்டு போலீஸார் இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.