Designed by Iniyas LTD
குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற விழிப்புனர்வு
குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கென மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஒன்று உலகமெங்கும் ஆண்டு தோறும் ஜுன் 12-ந் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
குழந்தை தொழிலாளர் (அகற்றுதல் மற்றும் முறைபடுத்துதல்) சட்டம் 1986-ன்படி அபாயகரமான தொழில்களில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என வரையறுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் ஆணையர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பெ.அமுதாவின் உத்தரவின் பேரில், குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாக கடைகள் மற்றும் நிறுவனங்களில் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள் பணியில் உள்ளனரா? என்பதை கண்டறியும் பொருட்டு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு தொழிலாளர் துறையை சார்ந்த அனைத்து அமலாக்க அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள தங்கசாலை, ஏழுகிணறு, பெரியமேடு, புளியந்தோப்பு, பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், கெல்லீஸ், புரசைவாக்கம் மற்றும் எழும்பூர் ஆகிய பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக அறிய நேர்ந்தால் 9445398740 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவல் சென்னை 3-வது வட்ட தொழிலாளர் ஆய்வாளர் வாசுகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.