Designed by Iniyas LTD
கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஶ்ரீதரனும் மஹிந்த தரப்பில்….
ஆட்சி மாற்றத்தை அடுத்து மகிந்த தரப்பும் ரணில் தரப்பும் தத்தமது பலத்தை நிரூபிக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஶ்ரீதரன் மஹிந்த தரப்பில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூபா 20 கோடி பணத்திற்கும் வன்னிக்கான மீன்பிடி கடற்றொழில் வள அமைச்சு ஒன்றும் உருவாக்கி தரவேண்டும் என கோரி மஹிந்த தரப்பினரிடம் அவர் கோரியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அவரின் கோரிக்கைக்கு ஒத்துக்கொண்ட மஹிந்த தரப்பு அவருக்கான அமைச்சை உருவாக்கி கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.