தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கூட்டமைப்பு உறுப்பினர் தாக்குதல் வழக்கு சாட்சிய பதிவுகள் இன்றி விசாரணை

யாழ் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பி னர்கள் மீது  மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக தொடர் வழக்கில். மூன்றாம் நாளான இன்றைய தினம் அழைக்கப்பட்ட சாட்சிகள்  சமுகமளிக்காத காரணத்தினால் சாட்சியப் பதிவு கள் இன்றி இன்றைய தினம் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.  tna

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று மாலை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்டமாஅதிபர் திணைக்களம் சார்பாக ஆஜராகிய அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிஷாந்தன் இவ்வழக்கு தொடர்பான ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.

இதன் போது சட்டத்தரணி இவ் வழக்கு தொடர்பில் தான் 40 சாட்சிகளை பதிவு செய்யப் போவதாகவும், இதில் 4 சாட்சிகள் கண்கட்ட சாட்சிகளாகவும் உள்ளன எனத் தெரிவித்ததோடு, இரண்டு பேரை மரணம் அடையச் செய்ததுடன்  பலரை காயமடையச் செய்தமை, கொலை முயற்சி போன்ற குற்றங்கள் உட்பட  23 குற்றச் சாட்டு க்கள் பதிவு செய்யப்பட்டதுடன். இச் சம்பவம் தொடர்பில் 19 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் ஆகவே இந்த வழக்கை விரைவில் விசாரித்து முடிவுக்கு கொண்டுவரப்பட்ட வேண்டும்.

எனவே இதன் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் எனத் தெரிவித்தார்.   மேலும் இவ் வழக்கின் தொடர் விசாரணை மற்றும் சாட்சிகளின் பதிவுகள் நாளையதினமும் இடம்பெறுவதோடு எதிர்வரும் 2 ஆம் திகதிவரை இவ் வழக்கு விசாரணை இடம்பெறும் என வும் அறிவிக்கப்பட்டது.

Comments
Loading...