Designed by Iniyas LTD
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் எதிர்வரும் 14ம் திகதி மீண்டும் நடைபெறும்
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் எதிர்வரும் 14ம் திகதி மீண்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த கூட்டம் கடந்த 10ம் திகதி நடைபெற்றிருந்தது. இதன் போது கட்சிகளுக்கான ஆசனங்களை ஒதுக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. எனினும் இதன் போது பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைஅடுத்து இணக்கப்பாடுகள் இன்றி நிறைவடைந்த இந்த கூட்டத்தை பின்னர் 14ம் திகதி மீண்டும் நடத்துவதாக இணங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.