தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கெய்ல் இல்லாமல் களம் இறங்கும் பெங்களூரு அணி!

201604200554168475_Bangalore-team-without-gayle_SECVPFநடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஆட்டங்களில் 3-ல் தோற்று சரிவின் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு எதிராக 142 ரன்களில் அடங்கிப் போனது. திறமைசாலிகள் பட்டாளம் நிறைய பேர் இருந்தும், ஒருசேர ‘கிளிக்’ ஆக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை மூன்று தொடக்க ஜோடியை பயன்படுத்தி பார்த்து விட்டார்கள். இப்போது தான் அணிக்கு வருகை தந்துள்ள மார்ட்டின் கப்தில் மற்றும் ஜோஸ் பட்லர், கேப்டன் ரோகித் சர்மா, பாண்ட்யா சகோதரர்கள் அதிரடியில் மிரட்டினால், சொந்த ஊரில் தலைநிமிரலாம். ‘இது நீண்ட தொடர். தோல்விகளை மறந்து விட்டு வரும் போட்டிகளில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியது அவசியம்’ என்று மும்பை பவுலர் டிம் சவுதி கூறியுள்ளார்.

2 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றியும் (ஐதராபாத்துக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (டெல்லிக்கு எதிராக) கண்டுள்ள பெங்களூரு அணி நடப்பு தொடரில் முதல்முறையாக வெளியூரில் கால்பதிக்க இருக்கிறது. அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல், முதல் இரு ஆட்டங்களில் ஜொலிக்கவில்லை. ஆனால் மும்பை வான்கடே ஸ்டேடியம் அவருக்கு ராசியானது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் இங்கு 48 பந்துகளில் செஞ்சுரி போட்டதை மறந்து விட முடியாது. என்றாலும் அவரது ஜாலத்தை இந்த சீசனில் மும்பை ரசிகர்கள் சொந்த ஊரில் பார்க்க இனி வாய்ப்பில்லை.

அவரது மனைவி நடாஷா பெரிட்ஜிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கெய்ல் அவசரமாக தாயகம் திரும்பி விட்டார். கெய்ல்-நடாஷா தம்பதிக்கு இது முதல் குழந்தையாகும். இன்றைய ஆட்டம் மட்டுமின்றி, அடுத்த ஆட்டத்திலும் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. கெய்ல் இல்லாத நிலையில் கேப்டன் கோலி, டிவில்லியர்ஸ், ஷேன் வாட்சன் ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது.

இவர்களில் யாராவது ஒருவர் களத்தில் நீண்ட நேரம் மையம் கொண்டால் பெரிய ஸ்கோரை எட்டி விடுவார்கள். கெய்லுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. பேட்டிங்கில் வலுவாக இருக்கும் பெங்களூரு அணிக்கு பந்து வீச்சு தான் இன்னும் சரியாக அமையவில்லை. டெல்லிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 191 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவியதில் இருந்தே பந்து வீச்சு பலவீனம் தெரியும்.

Comments
Loading...