Designed by Iniyas LTD
கேப்பாபுலவு நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் பட்டினிப்போராட்டம்!
பிரித்தானியா லண்டனில் இன்று மாலையிலிருந்து (26.02.2017) மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் புலம்பெயர் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் கேப்பாபுலவு மக்கள் தங்களது பூர்வீக நிலத்தினை மீட்கும் போராட்டத்தை கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக உலகமெங்கும் வாழும் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐ நா விற்கு எடுத்துக்கூறும் முகமாகவும், ஸ்ரீ விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கேப்பாபுலவு மக்களின் பூர்வீக நிலங்களை மீள கொடுக்க வலியுறுத்தியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இன்று பிரித்தானியாவில் பாரிய பட்டினிப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் பெருமளவான தாயக உறவுகள் பங்கெடுத்துள்ளனர்.













