Designed by Iniyas LTD
கேப்பாபுலவு நில மீட்பு போராட்ட மக்களிடம் காணிகளை வழங்குவது தொடர்பில் இன்று முடிவு!
கேப்பாபுலவு நில மீட்பு போராட்டத்தில் உள்ள மக்களை சந்தித்து பேசுவதற்காகவும் ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகளுடன் பேசி மக்கள் நிலங்களை ஒப்படைப்பதற்காகவும் வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான மஸ்தான்,சிவமோகன்,சாந்தி,சிவசக்தி ஆனந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஐவர் ஆக்கிரமிப்பு நிலங்களை விடுவிப்பது தொடர்பில் இராணுவ முகாமிற்குள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் தலைமை இராணுவ முகாம் நிலம் தவிர ஏனைய பகுதிகளை விடுவிப்பதாக ஸ்ரீ இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளதாக கேப்பாபுலவில் இருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.


