Designed by Iniyas LTD
கேப்பாபுலவு மக்கள் கொழும்பு வரை நடைபவனி போராட்டம்!
நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் முல்லைத்தீவிலிருந்து கொழும்பு வரை நடைபவணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளனர். இந்த நடைபவணி நாளை வெள்ளிக்கிழமை காலை முல்லைத்தீவிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் பேரணி கொழும்பு ஜனாதிபதி செயலகம் வரை தொடரவிருக்கின்றது.
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் பல்வேறு வாக்குறுதிகள் அளித்திருந்த போதிலும் கேப்பாப்புலவு மக்களுக்கு தங்களது சொந்தக் காணி இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் முல்லைத்தீவில் ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் 173ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.