தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கே.சிவாஜிலிங்கத்திற்கு காவற்துறை அழைப்பு விடுத்துள்ளது

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களிற்கு இலங்கை காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. கூட்டமைப்பு சார்பு வடமாகாணசபை உறுப்பினர்கள் கே.சிவாஜிலிங்கம் மற்றும் கஜதீபன் ஆகியோருடன் காரைநகர் பிரதேச சபை தலைவர் ஆனைமுகன் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.sivajilinkam

நாளை காலை யாழ்.காவல்நிலையத்திற்கு தம்மை சமூகமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். குறித்த கைகலப்பு சம்பவம் தொடர்பினில் ஈபிடிபியினர் செய்த முறைப்பாடுகளையடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கைகலப்பினில் தமது உறுப்பினர்கள் காயமடைந்திருந்ததாக ஈபிடிபி அறிவித்திருந்ததுடன் வடமராட்சி இணைப்பாளர் சிறீரங்கேஸ்வரன் கைமுறிந்திருந்ததாகவும் தெரியப்படுத்தியிருந்தது.அத்துடன் கைகலப்பினை கண்டித்து யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பதாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...