Designed by Iniyas LTD
கொக்கட்டிச்சோலையில் களிமண்ணுக்குள் கைக்குண்டு!
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி முன்மாரி கிராமத்தின் சூனையன்குடா எனும் இடத்தில் களிமண்ணுக்குள் இருந்து கைக்குண்டொன்று நேற்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப் பகுதியில் உள்ள தொழிலாளி ஒருவர் செங்கல் செய்வதற்கான களிமண்ணை கொத்தியபோது குறித்த கைகுண்டு களி மண்ணுக்குள் இருப்பதைக் கண்டுள்ளார். இது தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு தெரிவித்ததை தொடர்ந்து பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று கைக்குண்டினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டனர்.