தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொக்கிளாய் காணிப்பிரச்சனைகள் தொடர்பில் சாதகமாக பரிசீலிப்பதாக ஆளுநர் உறுதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று மாவட்ட செயலத்தில் நேற்று) நடைபெற்றுள்ளது.

வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே தலைமையில்  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது

இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் கொக்குதொடுவய் கருநாட்டுக்கேணி உள்ளிட்ட மக்களின் நிலங்கள் மகாவலி L வலையத்தினால் ஆளுகைப்படுத்தப்பட்டதையும் இதனால் தமது நிலங்கள் பரிபோவதையும் தமது குளங்கள் வயல்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினர்

இவற்றை கேட்டறிந்த ஆளுநர் சாதகமாக பரிசீலிப்பதாகவும்  மக்களது காணி விபரங்களை தருமாறும் கோரினார்

Comments
Loading...