தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொச்சி அணியை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மும்பை அணி

பிரிமியர் புட்சால் கால்பந்து தொடரில் நேற்று கோவாவில் நடந்த இறுதிப்போட்டியில் கொச்சி அணியை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மும்பை அணி. இந்தியாவில் ஐவர் கால்பந்து என்றழைக்கப்படும் பிரிமியர் புட்சால் தொடர் கடந்த யூலை 15ம் திகதி சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது.mum

இந்நிலையில், நேற்று கோவாவில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப்போட்டியில் கொச்சி – மும்பை அணிகள் மோதின. நான்காவது பாதி முடிவில் போட்டியில் 1-1 என சம நிலையை எற்பட்டது, இதைதொடர்ந்து இரு அணிகளும் பெனால்டி ஷூட்அவுட் விளையாடினர். இதில் மும்பை அணி 3-2 என்ற கோல் கணக்கில் கொச்சி அணியை வீழ்த்தி முதல் பிரிமியர் புட்சால் கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது.

இந்த ஆண்டின் சிறந்த இந்திய வீரராக ஜொனாதன் பியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார். மும்பை வீரர் Angelloவிற்கு The Golden Arm band வழங்கப்பட்டது. தொடரின் சிறந்த வீரராக கொச்சியின் Chaguinha தெரிவு செய்யப்பட்டார். பிரிமியர் புட்சால் தொடரின் முதல் கிண்ணத்தை கைப்பற்றி மும்பை அணிக்கும், அணித்தலைவர் ரியன் கிக்ஸிற்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Comments
Loading...