தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரோபட் செக்யூரிட்டி

பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து பயணிகளை பாதுகாக்க கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரோபட் செக்யூரிட்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Kochi-airport

இதன் மூலம் விமான கடத்தல் சம்பவங்கள், வெடிகுண்டை செயலிழக்க வைத்தல், தீயை அணைக்கும் பணிகள் போன்றவற்றில் மனிதர்களுக்கு பதிலாக ரிமோட்டுகளை கொண்டு கட்டுப்படுத்தப்படும் ரோபட்டுகள் ஈடுபடுத்தப்படுகிறது. ரூ.12 கோடி செலவில் இந்த திட்டம் அடுத்த மாதம் கொச்சி ஏர்போர்ட்டில் அறிமுகமாகிறது. 

ஆர்.எம்.ஐ. என்ற (ரிமோட் மொபைல் இன்வெஸ்டிகேட்டர்) ரோபட் அமெரிக்காவில் போலீஸ், தீயணைப்புத்துறை, ராணுவம் மற்றும் அணு உலை, தொழிற்சாலைகளில் பாதுகாப்பு பணிகளில் வெற்றிகரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. 

அதேபோல், டி.சி.வி. எனப்படும் (த்ரெட் கண்டெய்ன்மண்ட் வெஸல்) சேஃப்டி ரோபட்கள் பயணிகளின் பொருட்களை ஸ்கேன் செய்து வெடிகுண்டு இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் கனடாவை சேர்ந்த பெட்ஸ்கோ லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவின் நேப்கோவில் டெவலப் செய்யப்பட்டவை.

இந்த பாதுகாப்பு ரோபட்கள் கேரளாவிற்கு ஏற்கனவே வந்தடைந்துவிட்டன. தற்போது அவற்றின் பாகங்கள் இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். தென் மாநிலங்களிலேயே முதல்முறையாக கேரளாவில் இந்த உயரிய பாதுகாப்பு முறை அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது

Comments
Loading...