Designed by Iniyas LTD
கொட்டும் மழைக்கு மத்தியில் மனித சங்கிலிப் போராட்டம்!
வவுனியாவில் இன்று பிற்பகல் கொட்டும் மழைக்கு மத்தியில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரால் மனித சங்கிலிப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திலிருந்து, மாவட்ட செயலக பிரதான வாசல் வரையும் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்யுமாறும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடன் நீக்குமாறும், அனுராதபுரத்தில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கையினை நிறைவேற்றுமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த போராட்டத்தில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், வைத்தியர், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.