Designed by Iniyas LTD
கொண்டாட்டாம் ஆரம்பம்! விவேகம் ரிலீஸ் இன்றா? ரசிகர்களால் பரபரப்பு!
தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகின் பல இடங்களில் ரசிகர்களின் அடுத்த பரபரப்பான எதிர்பார்ப்பாக மாறிவிட்டது விவேகம். இதற்கு நேற்று வெளிவந்த விவேகம் ட்ரைலரே காரணம்.
இது குறித்து பிரபலங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் நேற்றே செய்தியாக வெளியிட்டிருந்தோம். படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் மதுரையை சேர்ந்த ரசிகர்கள் முதல் ஆளாக 30 அடி உயரத்தில் விவேகம் படத்திற்காக கட்டவுட் வைத்து அசத்தியிருக்கிறார்கள். இதனால் படம் ரிலீஸ் இன்றா என்பது போல நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திரையரங்குகள் மட்டுமல்ல, ரசிகர்களும் ஃபிளக்ஸ், போஸ்டர் என ஒரு கைபார்த்து விடுவார்கள். போட்டி போட்டு பேனர் வைத்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.