Designed by Iniyas LTD
கொத்தடிமைகளாக பணிபுரிந்தவர்கள் மீட்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த ஐநூறுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். 
ஆரணி அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான செங்கல் தொழிற்சாலை உள்ளது. இதில் ஒடிஸா மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக பணி அமர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதை அடுத்து தனியார் தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் பொன்னேரி கோட்டாட்சியர் நாராயணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 548 பேர் கொத்தடிமைகளாக பணி புரிந்து வருவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அனைவரையும் அதிகாரிகள் மீட்டனர். இதையடுத்து செங்கல் தொழிற்சாலையின் உரிமையாளர் நீலா கிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து ஆரணி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு இதே செங்கல் தொழிற்சாலையில் 522 பேர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.