Designed by Iniyas LTD
கொலை வழக்கில் கைதான காவற்துறையினர் நீதிமன்றில் ஆஜர்
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று காலை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த 20 ஆம் திகதி இரவு யாழ் பல்கலைக்கழக மாணவர்களாக விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் பொலிஸாரினால் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐவர் கடந்த 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பட்டதை அடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.