Designed by Iniyas LTD
கொழும்பிற்கு பயணம் செய்யும்போது வவுனியாவில் இரண்டாக பிரிந்த யாழ் தேவி!..
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற யாழ்தேவி வவுனியா இரட்டைப்பெரியகுளம் உப ரயில் நிலையத்திற்கு அருகில் சென்றபோது இரண்டாக பிரிந்துள்ளது.
ரயிலின் எஞ்சினுடன் மூன்று பெட்டிகள் வேறாகவும் நான்காம், ஐந்தாம், ஆறாம் மற்றும் ஏழாம் பெட்டிகள் வேறாகவும் பிரிந்துள்ளன.
இவ்வாறு இரண்டாகக் கழன்ற பெட்டிகள் சுமார் ஒரு கிலோமீட்டர் வரை பயணித்து மோதியதாக கூறப்படுகின்றது..
இதன் காரணமாக குறித்த யாழ்தேவி சேவையில் சுமார் 30 நிமிட தாமதம் ஏற்பட்டுள்ளது.
பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக, ரயிலில் பயணித்த தலைமை பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் இயந்திரக் கோளாறு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.