தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொழும்பு ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளைப் பணியகம் என்ற புதிய கட்டமைப்பு …

கொழும்பு ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளைப் பணியகம் என்ற புதிய கட்டமைப்பு ஒன்றை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உருவாக்கியுள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள அனைத்து இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் பிரதேசங்களும் உடனடியாக இந்தக் கட்டளைப் பணியகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் இராணுவத் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேற்குப் படைகளின் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொழும்பு ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளைப் பணியகத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

கடற்படையின் றியர் அட்மிரல் டபிள்யூ.ஏ.எஸ்.எஸ். பெரேரா, விமானப்படையின் எயர் வைஸ் மார்ஷல் டபிள்யூ.எல்.ஆர்.பி. றொட்றிகோ, பொலிஸ் பரிசோதகர் அனில் பிரியந்த ஆகியோர் நடவடிக்கைப் பணியகத்தின் இணைப்பதிகாரிகளாக நியமிக்கபப்ட்டுள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் கீழ் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கொழும்பு ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளைப் பணியகம் செயற்படும் என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை சத்யபிரிய லியனகே இறுதிப் போரின் போது போர்க் குற்றங்களில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...