தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொழும்பு துறைமுக பகுதியை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தங்கள் சீனாவுக்கு

கொழும்பு துறைமுகத்தின் ‘ஜய’ கொள்கலன் இறங்குதுறை பகுதியை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தங்களை சீனாவுக்கு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது  தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்தவகையில் ஶ்ரீலங்கா துறைமுக அதிகார சபையின் ‘ஜய’ கொள்கலன் முனையத்தை நவீனப்படுத்தும் திட்டத்துக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு தேவையான 3 கிரேன்களை அதிகார சபையின் நிதியை பயன்படுத்தி கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ,  குழு சிபாரிசுக்கமைய சீனாவின் வரையறுக்கப்பட்ட சங்ஹாய் சென்ஹுவா ஹெவி இன்டஸ்ரீஸ் நிறுவனத்திடம் கையளிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குரிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...