தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொழும்பு மருத்துவமனையில் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ள சடலங்கள்…

கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட 42 வெளிநாட்டவர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 12 வெளிநாட்டவர்கள், குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு மருத்துவமனையில் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ள சடலங்களுக்குள் அவர்களின் சடலங்களும் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் 5 வெளிநாட்டவர்கள் இன்னமும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...