Designed by Iniyas LTD
கோகுல்ராஜ் கொலை வழக்கு : யுவராஜ் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக, யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன், காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். சுமார் 700 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், யுவராஜ், அவரது நண்பர்கள், சிவகுமார் மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி பள்ளிப்பாளையம் அருகே சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்து திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி விஷ்ணு பிரியா கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம்தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட யுவராஜ் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினரிடம் சரணடைந்தார்.