தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ்ப் பிரதிநிதிகள் ஆதரவளிப்பதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – துரைரெட்ணம்

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ்ப் பிரதிநிதிகள் ஆதரவளிப்பதை, வடக்கு – கிழக்கு வாழ் தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேரம் பேசியே தமிழ்ப் பிரதிநிதிகள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வடக்கு கிழக்கில் ஏற்பட்ட ஒட்டுமொத்த அழிவுகளுக்கும் கோட்டாபய ராஜபக்ஷவே காரண கர்த்தாவாக இருக்கின்றார்.

இவ்வாறான ஒருவருக்கு ஆதரவான கருத்துக்களை தமிழ் தலைமைகள் சொல்லுவது என்பதில் சரி பிழை இருக்கலாம். ஆனால் வடக்கு – கிழக்கு வாழ் தமிழர்கள் இதனை அஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Comments
Loading...