Designed by Iniyas LTD
கோட்டை – ரெலிகொம் நிறுவனத்திற்கு அருகில் கிடந்த மர்ம பொதியால் பதற்றம்…
கொழும்பு – கோட்டை – ரெலிகொம் நிறுவனத்திற்கு அருகில் கிடந்த மர்ம பொதியால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்திலேயே குறித்த பொதி வைக்கப்பட்டிருந்தது.
பேருந்தொன்றில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளர்.
இதையடுத்து அங்கு விரைந்த காவற்துறையினர் மேற்படி பொதியை சோதனையிட்ட போது அதில் வெடி பொருட்கள் எதுவும் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பொதி வைத்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வீதியில் குறித்த பேருந்தை நிறுத்தி விட்டு சென்றமை தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.