Designed by Iniyas LTD
கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்நாளுக்கு தடைகோரி மனு தாக்கல்..
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்நாளுக்கு தடைகோரி மனுவொன்றை யாழ் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்த நிலையில் இதன் பின்னணியில் தமிழரசுக்கட்சியும் சுமந்திரன் அணியினது பின்னணியுமிருக்கலாமெனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த கோப்பாய் தரவை தற்போது இலங்கை இராணுவத்தின் 512வது படையணியின் தலைமை முகாமாக உள்ளது.
தொடர்புடைய பதிவு
கடந்த 1996ம் ஆண்டில் மாவீரர் துயிலுமில்லம் முற்றாக இடித்தழிக்கப்பட்ட நிலையில் 2002ம் ஆண்டின் சமாதான காலத்தில் மீளக்கட்டியெழுப்பப்பட்டது.
இந்நிலையில் அது மீளவும் , 2008 ம் ஆண்டில் மீள இடித்தழிக்கப்பட்டு தற்போதுள்ள படை தளம் அமைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டினில் படைத்தள நுழைவாயிலில் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இம்முறை அங்கு மாவீரர்களை நினைவுகூருவதற்கு தடை உத்தரவு கோரியுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.