தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டுக்கள் இராணுவமுகாமிலிருந்து மீட்பு..

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் பதிக்கப்பட்டிருந்த மாவீரர்களின் கல்வெட்டுக்கள் ஊரெழு இராணுவ முகாம் இயங்கிய காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கல்வெட்டுக்களை மாவீரர் குடும்பங்களின் விவரங்களைத் திரட்டுவதற்காக ஊரெழு இராணுவப் புலனாய்வாளர்கள்  எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் ஆட்சிக்காலத்தில் ஊரெழு இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவின் முகாமாக இயங்கி வந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.

வெள்ளை வான்களில் கட்டத்திச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை படையினர் அந்த முகாமுக்குள்ளேயே தடுத்துவைத்திருந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில்  மனித உரிமைகள் ஆணைக்குழுவோ பொலிஸாரோ விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...