Designed by Iniyas LTD
கோமா நிலையில் உள்ளவர்கள் ஒரு வருடத்திற்குள் மீண்டு வந்துவிடுவார்களா?
மூளையில் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்புக்களினால் நோயாளிகள் கோமா நிலைக்கு செல்லும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
ஆனால் இவ்வாறு கோமா நிலைக்கு செல்பவர்கள் உயிர் மீள்வது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. இதில் சிலர் வருடக் கணக்கில் கோமா நிலையில் இருப்பதுவே கொடுமையிலும் கொடுமை. இவ்வாறானவர்கள் ஒரு வருடத்திற்குள் மீண்டு வந்துவிடுவார்களா? என்பதை அறியும் புதிய முறை ஒன்றினை விஞ்ஞானிகள் முன்மொழிந்துள்ளனர்.
அதாவது கோமா நிலையில் உள்ள போது சக்திக்காக மூளையின் கலங்களால் பயன்படுத்தப்படும் சர்க்கரையின் அளவினை கணிப்பிடுவதன் ஊடாக குறித்த நோயாளி ஒரு வருடத்திற்குள் கோமா நிலையிலிருந்து மீண்டு வரக் கூடிய சாத்தியம் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Copenhagen மற்றும் Yale பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வின் முடிவில் இம் முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 131 வரையான நோயாளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இச் சோதனை 94 சதவீத சாதகமான பதிலைத் தருவதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.