Designed by Iniyas LTD
கோர விபத்தில் உயிரிழந்த யுவதி – CCTV காணொளியில் வெளியான பயங்கரம்.
அண்மையில் கிரிபத்கொடயில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பான CCTV காணொளி தற்போது ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வண்டி சாரதியின் பொறுப்பற்ற செயற்பாடே யுவதியின் உயிரிழப்புக்கு காரணம் என உறுதியாகியுள்ளது.
கிரிபத்கொட பிரதேசத்தில் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியின் கதவு, போக்குவரத்து விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டுள்ளது.
ஜீப் வண்டியின் கதவு வீதி பக்கத்தில் திறக்கப்பட்ட போது மோட்டார் சைக்கிள் ஒன்று அந்த கதவில் மோதுண்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண், அவ்வழியாக வந்த லொரியில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
பெம்முல்ல பிரதேசத்தை சேர்ந்த நீதா கமகே என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றவர் சிறு காயங்களுடன் தப்பியிருந்தார்.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் இந்த காட்சி பதிவாகியிருந்த நிலையில் அந்த காணொளி தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.