தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கோலாலம்பூர் முன்னாள் பிரதமரின் தாயார் வீட்டில் போலீசார் திடீர் சோதனை..

கோலாலம்பூர், ஜாலான் ஈட்டனிலுள்ள முன்னாள் பிரதமர் நஜிப்பின் தாயார் ராஹா முகமட் நோஆவின் வீட்டை போலீசார்  திடீர் சோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார்  பிரதமரின் வீட்டை  திடீர் சோதனையிட்டுள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட அதே நேரத்தில் கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நஜிப் மீது பணச் சலவை சம்பந்தப்பட்ட 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 14 பேர் அடங்கிய   குழுவினர்  அவரின் வீட்டினை திடீர்  ,சோதனையிட்டுள்ளதாகவும்   .கூறப்பட்டுள்ளது.

எனினும் முன்னாள் பிரதமரின் தாயாரின் வீட்டில் எதுவும்   அகப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...