Designed by Iniyas LTD
கோவையில் மாணவர்கள் தற்கொலை முயற்சி
கோவையில், அரசு உதவி பெறும் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை புதூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் சி.பி.எம். கல்லூரியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இக் கல்லூரியில் மின்சாரம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, கடந்த மாதம் 5 ஆம் தேதி முதல் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி கல்வி இணை இயக்குநர் தலைமையில் கல்லூரியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு கல்லூரிச் செயலாளர் வராததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், கல்லூரி வளாகத்துக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இச்சூழலில் மாணவர் ஒருவர் பிளேடால் கையை வெட்டிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த சூழ்நிலையில் கல்லூரி கல்வி இணை இயக்குநர் ஜெகதீஷ் வாகனத்தை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கல்லூரியை அரசே ஏற்று நடத்த பரிந்துரை செய்துள்ளதாக அவர், கூறியதை தொடர்ந்து அவரது வாகனம் விடுவிக்கப்பட்டது.
