Designed by Iniyas LTD
சகலர்க்கும் பணிப்புரை வழங்கவேண்டும் CVK சிவஞானம் வட மாகாண பிரதம செயலாளருக்கு அறிவிப்பு
வடமாகாண சபையின் நிர்வாகக் கட்டுபாட்டுக்குள் அடங்கும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளின் வாகனங்களில் அவர்களது பதவி பெயர்ப் பலகை தமிழ் மொழியில் பொருத்த உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சகலர்க்கும் பணிப்புரை வழங்கவேண்டும்மென வடக்கு மாகாண அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் மூலம் வட மாகாண பிரதம செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் கட்டுபாட்டுக்குள் உள்ள அதிகாரிகளே தமது வாகனங்களில் தமது பெயர் பலகைகளை தமிழில் எழுதாதது பற்றி தமது கவனத்துக்குகொண்டுவரப்பட்டதை அடுத்து இந்த அறிவுறுத்தல் பிரதம செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதிகள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் அரசாங்க அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சீ.வீ.கே.சிவஞானம்
அவைத்தலைவர்
வடக்கு மாகாண சபை