Designed by Iniyas LTD
சசிகலாவுக்கு கால அவகாசம் கிடையாது! உடன் சரணடைய உத்தரவு
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்றும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்த உச்சநீதிமன்றம் உடனடியாக அவர்கள் பெங்களுரு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது.
அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருப்பதால் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதாலும், உடல்நிலை சரியில்லை என்பதாலும், நான்கு வார கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் சசிகலா கோரியிருந்தார். தீர்ப்பு உத்தரவில் எந்தவிதமான மாறுதலும் செய்ய முடியாது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சரணடைய கால அவகாசம் அளிக்க முடியாது என்றும், உடனடியாக பெங்களுரு நீதிமன்றத்தில் சசிகலா உள்ளிட்டோர் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.