தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சசிகலாவுக்கு வெளிநாட்டு துதுவர்கள் வாழ்த்து மழை!

201701070654283198_shashikala-greeting-foreign-ambassadors_secvpf-450x256அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு வெளிநாட்டு தூதர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். நேற்று வாழ்த்து தெரிவித்தவர்களின் விவரம் வருமாறு:-

தென் இந்தியாவுக்கான ரஷிய தூதர் செர்ஜே எல்.கோடவ், சென்னை ரஷிய தூதரக அதிகாரி எவ்கேனி கிராவ்சென்கோ, ரஷிய தூதரக கலாசார பிரிவின் தகவல் ஆலோசகரும், இந்திய ரஷிய வர்த்தக சபையின் பொதுச்செயலாளருமான தங்கப்பன், மாசிடோனியாவுக்கான இந்திய தூதரக அதிகாரி அரவிந்த் குப்தா, செனகலுக்கான இந்திய தூதரக அதிகாரி அசோக் தக்கர் ஆகியோர் தனித்தனியே நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

திரைப்பட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கரண், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தமிழ் திரையுலக பாதுகாப்பு பேரவையை சேர்ந்த தயாரிப்பாளர் சங்க செயற்குழு தலைவர் அழகன் தமிழ்மணி, தயாரிப்பாளர் கே.சீனிவாசன், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் எபி குஞ்சுமோன், சென்னை திரைப்பட விழா தலைவர் தங்கராஜ் ஆகியோரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments
Loading...