Designed by Iniyas LTD
சச்சின் மீண்டும் மும்பை அணிக்காக களமிறங்கப் போகிறாரா?
ஐபிஎல் 8வது தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் மீண்டும் விளையாடப் போகிறாரா என்று ரசிர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் விளையாடி வந்தார்.
இதைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு கிண்ணம் வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். இந்நிலையில் சச்சின் டிவிட்டரில் போட்டுள்ள ஒரு பதிவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் சீருடையுடன் உள்ள புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ள சச்சின், “கண்டுபிடியுங்கள் பார்ப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மும்பை தனது தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் வீழ்ந்தது.
இதைத் தொடர்ந்து, வரும் 12ம் திகதி மும்பையில் நடக்கவுள்ள போட்டியில் சச்சின் மீண்டும் மும்பை அணிக்காக களமிறங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.