தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசிற்கு எம்எல்ஏ பதவி கூட கிடைக்காது – பொன். ராதாகிருஷ்ணன்

ராகுல் காந்தியை தமிழக முதலமைச்சராக்க வேண்டும் என்று இளங்கோவன் கூறியிருப்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தமாஷ் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.  ponratha

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “காங்கிரஸ் கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு எம்எல்ஏ பதவி கூட கிடைக்காது.   நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. ஒரு எம்.பி. தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாத நிலையில் உள்ளது காங்கிரஸ் கட்சி.   இந்த நிலையில் இருக்கும் போது, ராகுலை தமிழக முதலமைச்சராக்க வேண்டும் என்று இளங்கோவன் தெரிவித்திருக்கும் கருத்து, நூற்றாண்டின் மிகப்பெரிய தமாஷ்.   இந்த தமாஷைக் கேட்டு அவர்களது கட்சியினரே சிரிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

Comments
Loading...