Designed by Iniyas LTD
சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது…
கம்பஹா – மாதம்பை பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 4 தோட்டாக்களைக்கொண்ட துப்பாக்கியொன்றும் மற்றும் மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், குறித்த தொழிலில் ஈடுப்பட்டு வரும் மேலும் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.