தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சட்டவிரோத முறையில் பிடிக்கப்பட்ட மீன்கள் விசேட அதிரடிப்படியினரால் பறிமுதல்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி முறையில் பிடிக்கப்பட்ட சுமார் பத்தாயிரம் கிலோவுக்கு அதிகமான மீன்கள் விசேட அதிரடிப்படியினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீன்கள் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினர் உரியவர்களிடம் ஒப்படைக்க  உள்ளதாக தெரிவிகப்படுகின்ற நிலையில்,  மீனவர்கள் சுமார் 50 ற்கு மேற்ப்பட்டவர்கள்  கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒன்றுகூடி சட்ட நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்

இதில்  வட மாகாண சபை உறுப்பினர் து ரவிகரன்  மக்களுடன் கலந்துரையாடி சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...