Designed by Iniyas LTD
சதொச வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புகூடுகள் தொடர்பில் சந்தேகம்..
மன்னார் ‘சதொச’ வளாக புதைகுழியிலுள்ள மனித எலும்புகூடுகள் வேறு பகுதிகளில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பின்னர் அப்பகுதிக்கு எடுத்துவரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இறுதி யுத்ததில் சரணடைந்தவர்கள் மற்றும் கைதானவர்கள் படைத்தளங்களில் கொல்லப்பட்ட பின்னர் வெளியே வேறு இடங்களில் அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே படையினர் மூலம் தகவல்கள் கசிந்திருந்தன.
மன்னார் புதைகுழி தொடர்பில் பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்புக்கூடுகள் அங்கு மீட்கப்பட்டு வருகின்றது.
எனினும் குறித்த பகுதியில் கொலை செய்யப்பட்டமை தொடர்பான சான்றாதாரங்கள் எவையுமே கண்டுபிடிக்கப்படவில்லை.
தொடர்புடைய பதிவு
இதன் காரணமாக அவர்கள் வேறுபகுதிகளில் கொலை செய்யப்பட்ட பின்னர் அங்கு எடுத்துவரப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை சதொச வளாகத்தில் இதுவரை 126 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவற்றில் 120 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டடத்தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இடம் பெற்ற அகழ்வு பணியின் போது , கைகள் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும் கால்கள் ஒன்றுடன் ஒன்று குறுக்காக பிணைக்கப்பட்ட விதத்திலும் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே சதொச’ வளாக புதைகுழியிலுள்ள மனித எலும்புகூடுகள் வேறு பகுதிகளில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பின்னர் அப்பகுதிக்கு எடுத்துவரப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
