தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சந்ததிக்கே பசித்தால் தாங்கவே மாட்டாய்!

13187

திருட்டுப் போன சந்ததியாய்
செத்தொழிக்கப் பார்ப்பார்- அவர்
சிந்தையிலே எம்மைச் சுட்டு
தம்கடனைத் தீர்ப்பார்.

வெள்ளைவானைக் கொண்டு
வீரமறவர்களை சாய்ப்பார்-இவர்
வீழ்ந்த இனமென்று எம் இனத்தை
வீதியிலே சேர்ப்பர்.

காணிப்பிணக்குகளைத் தீர்ப்பர்
காணாமல் போனோர் என்றால் விளிப்பர்
பரிசீலனையில் வழக்கு உள்ளதென்று
பாமரருக்கு பாடம் எடுப்பர்

பாதித் தமிழன் புதையுண்ட
பாதைகளை மறைப்பர்-இவர்
பாத்திரமும் கொடுத்துப் பிச்சையும்
கொடுத்து பலிக்கடாயாயும் செய்வர்

உண்மையை சொல்லு
எம்மவர்கள் எங்கே?
எமை சுற்றி கல்லறை கட்டாதே!
கதவுகள் திறக்கப்பட இல்லை என்றால்
சுவர்களை உடைப்பதில் தவறில்லை
ஏனெனில்
எம் சந்ததிக்கே பசித்தால் தாங்கவேமாட்டாய்…

-கனகரத்தினம் செந்தூரன்

Comments
Loading...