தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சன் டிவி ஒளிப்பதிவாளர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல்

கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது பாதுகாப்பு குறைபாட்டால் வாகனத்தில் இருந்து விழுந்த ஒளிப்பதிவாளர் இழப்பீடு கேட்டு சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.  sun-tv

இது தொடர்பாக சன்டிவியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் லோகநாதன் என்பவர் சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 23ம் தேதி கருணாநிதி கோபாலபுரத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பும் போது அவருடைய பாதுகாப்பு வாகனத்தில் இருந்து ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது கருணாநிதி வாகனத்தின் குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று வந்ததால் பாதுகாப்பு வாகன ஓட்டுனர் திடீரென வாகனத்தை நிறுத்தியபோது நிலை தடுமாறி சாலையில் விழுந்ததாக லோகநாதன் தெரிவித்துள்ளார். இதில், தனக்கு இடது தோள்பட்டை மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் தம்முடன் இருந்து உதவி ஒளிப்பதிவாளர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சன் நெட்வொர்க் நிறுவனம் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து தங்களுக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுத் தருமாறு சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் லோகநாதன் மனு தாக்கல் செய்துள்ளார்.

Comments
Loading...