தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சமூகத்தில் சரிபாதியான மகளிருக்கு எமது வாழ்த்துக்கள்!

3575velmஇன்று சர்வதேச மகளிர் தினமாகும். இன்று அனைத்து தமிழ் பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் …
தமிழகத்தை பின்பற்றி நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கிடுக!
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33%  இடஒதுக்கீடு தரும் சட்டத்தை உடனே நிறைவேற்றிடுக!
 சமூகத்தில் சரிபாதியான மகளிருக்கு “சர்வதேச மகளிர் தின” நல்வாழ்த்துகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.
ஊதிய உயர்வு, பணி நேரம், வாக்களிப்பு உரிமை என உரிமைகளுக்கான போராட்டங்களின் அடிப்படையில் உருவானதே சர்வதேச மகளிர் தினம். இன்னமும் பெண்கள் தங்களுக்கான உரிமை சார்ந்த போராட்டங்களை தொடர வேண்டிய நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் பெருகிவரும் மது பழக்கத்தால் வல்லுறவு சம்பவங்கள் அதிகரிக்கிற நிலை இருக்கிறது. பெண்களைப் பாதுகாக்க மது விற்பனை என்பதை முற்று முழுதாகத் தடை செய்ய வேண்டும்.
அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இதற்கு முன்னோடியாக தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடம் அளிக்க வகை செய்யும் சட்டத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளனர்.
சரித்திரம் பேசும் இந்த சாதனையை நிகழ்த்திய மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு சர்வதேச மகளிர் தின நாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெரும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தைப் பின்பற்றி நாடு தழுவிய அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடம் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் பல்லாண்டுகாலமாக பேசப்பட்டு வருகிற நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Loading...