தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சமூக வலைதளங்களை கலக்கும் தர்பார் ஃபர்ஸ்ட்லுக்!

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  அடுத்து மீண்டும் லைகா நிறுவனத்துடன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

படத்தினை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

படத்தின் நடிகை, நடிகர்கள் விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் தலைப்பு அடங்கிய முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு தர்பார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி கதாபாத்திரம் போலீஸ்  என்பது போஸ்டரில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அனிருத் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

2020 பொங்கலுக்கு தர்பார் வெளியாகும் என போஸ்டரில் அறிவிக்கப்பட்டு விட்டது.

ரசிகர்கள், இந்த பொங்கல் பேட்ட , அடுத்த பொங்கல் தர்பார் என கொண்டாடி வருகின்றனர்.

Comments
Loading...