தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி …

கொழும்பில் இளைஞன் மற்றும் யுவதி  ஒருவரை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு  நுகேகொட பிரதேசத்தில் தனியார் வகுப்புக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளம் பெண் ஒருவருடன் சென்ற இளைஞன் ஒருவரை இன்னும் சில இளைஞர் இணைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் இளைஞனுடன் சேர்ந்து குறித்த பெண்ணும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த  சம்பவம்  குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது. 
Comments
Loading...