தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சமையல் எரிவாயு மானியத் திட்டம்: வாடிக்கையாளர்கள் இணைய இன்று கடைசி நாள்

HY15_GAS_1209910fசமையல் எரிவாயு மானியத் திட்டத்தில் இணைய இன்று கடைசி நாள் ஆகும்.  இத்திட்டத்தில் இன்றுக்குள் இணைவோருக்கு ஜனவரி முதல் இதுவரை வாங்கிய சிலிண்டர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட மானியம் மொத்தமாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

மேலும் நாளை முதல் இணையும் வாடிக்கையாளுக்கு கடந்த 6 மாதம் மானியம் கிடைக்காது. எந்த மாதத்தில் இணைகின்றார்களோ அந்த மாதத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மானியம் தரப்படும்.

தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 1 கோடியே 54 லட்சம் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் நேரடி மானியத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.

Comments
Loading...